திரும்பவும் சொல்றன் மறந்துடாதீங்க

Csk  வேண்டாம் cmb தான் வேணும்,ஆமா முத்துநகர் தூத்துக்குடியில 13 பேர சுட்டு கொன்னங்களே அது என்ன ஆச்சு அதுக்கு யார் பொறுப்பு ஏத்துகிட்டாங்க, Sterlite company முடியாச்சு எல்லா பிரிச்சனையும் முடிஞ்சிடுச்சுன்னு நினைச்சிட்டு இருக்கோம்ல, எப்படியோ ஒரு வழியா யாரு முதல்வர்னு சீட்டுல பெயர் எழுதி குலுக்கி போட்டு பாத்து முடிவு பண்ணிட்டோம்,இனிமே அரசாங்கம் நல்லா வேலை செய்யுதுன்னு நம்பலாம்,

இன்னைக்கு பெட்ரோல் விலை என்னன்னு தெரியுமா?,

8வழி சாலை அவசியமா ?

இப்படி தமிழ்நாடு முழுக்க ஏகப்பட்ட பிரச்னை, என்னடா bigg boss revealed னு டைட்டிலை போட்டுட்டு என்னென்னவோ பேசிட்டு இருக்க னு தான நினைக்கிறீங்க? அவ்ளோ ஆர்வம் bigg boss மேல.

மேல சொன்ன எல்லா பிரச்சனையும் இன்னும் 100 நாளைக்கு மறந்துடுவோம்,மறக்கடிச்சிடுவாங்க, அதுக்கு அப்புறம் அதுவே பழகிடும்  ஓவியா army டா ஜூலி ஒழிக டானு புது புது பெயரில் facebookல instagramல active இருக்க போறோம்.

Electionல ஓட்டு போடுறோமோ இல்லையோ bigg boss ல ஓட்டு போட்டுடுவோம். நீ யாருக்கு மச்சான் ஓட்டு போட்ட னு பக்கத்துல இருக்குறவன கேட்டு சாகடிப்பிங்க. முட்டை கணேஷ், trigger ஷக்தி, கட்டிபுடி வைத்தியம், மருத்துவ முத்தம்னு 100 நாளைக்கு ஒரே entertainment தான்.

9 மணி ஷோகு காலைல இருந்தே promo பாத்துட்டு இருப்போம், promo வர லேட்டா ஆச்சுன்னா கடுப்பு ஆயிடுவோம், அவ்ளோ வெறி bigg boss ல… சரி நீ ஏண்டா இதெல்லாம் இப்போ பேசிக்கிட்டு இருக்கனு கேட்டா, நானும் இதை தான் அடுத்த 100 நாள் பண்ண போறன். கேக்கவே கேவலமா இருக்குல்ல ஆனா அது தான் உண்மை.

நமக்கு entertainment முக்கியம் தான் boss, ஆனா அடுத்த 100 நாள் நம்மள சுத்தி நடக்குற எல்லாத்தையும் கவனிக்கமா மறக்க போறோம். மறதி தேசிய வியாதினு நல்லா தெரிஞ்சு வைத்திருக்கிற corporatesம் அரசியல்வாதிகளும்,அவங்களுக்கு மேல இருக்குற பெரு முதலாளிகளும் இந்த 100 நாள்ல நம்மள நம்ம பிரச்னையை மறக்கடிக்க போறாங்க.

Entertainment அ முடிச்சிட்டு நாம reality குள்ள திரும்பும் போது இன்னும் நிறைய நிறைய பிரச்னை புதுசா முளைத்திருக்கும். அப்போ கத்தி கத்தி போராடுறதுக்குள்ள அந்த பிரச்னை பழசாயிட்டு இருக்கும்.

இங்க போராடுன தான் குறைந்தபட்ச உரிமைகளே கிடைக்கும்னு இருக்கு. நாமளும் நிறைய போராடுறோம் திரும்பவும் மறந்துடுறோம், அதே அரைச்ச மாவு புளிச்ச கதையா நம்ம மனசு அதுக்கு பழக்கப்பட்டுடுச்சு. எல்லாம் சரிதான்பா இதுக்கு என்னதான் தீர்வுன்னு கேட்டிங்கன்னா, solution சொல்ற அளவுக்கு நான் பெரிய ஆள் இல்ல, நான் கேட்குறது ஒன்னே ஒன்னு என்னன்னா, bigg boss பாருங்க ஆனா நம்ம பிரச்னை எதையும் மறந்துடாதீங்க.

நம்ம தோள்கள் ல நிறைய பொறுப்பு இருக்கு, அதுக்கு நாம தான் பொறுப்பு.

திரும்பவும் சொல்றன் மறந்துடாதீங்க…

ராஜேஷ் ஜெகதீசன்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s