எனக்கு ரொம்ப வலிக்குது அம்மா

தமிழனோட கலாச்சாரம் மிகவும் தொன்மை வாய்ந்தது , எல்லா நல்ல பண்புகளையும் தனி மனிதனுக்கு கற்பிக்கிறது, தமிழ் பண்புகள் தான் மிக சிறந்தது என்று சொல்வதுண்டு, அனால் நிச்சயம் அது நமக்கு எல்லா பண்புகளையும் சொல்லி கொடுத்திருக்கிறதா? என்கிற சந்தேகம் எழுகிறது. தனி மனித ஒழுக்கம் எங்கே கற்பிக்கப்படுகிறது?

ஒரு சமுதாயத்தின் கட்டமைப்பின் பின்னால் தனி மனித ஒழுக்கம் மிக முக்கியமான ஒன்று. அனால் அந்த ஒழுக்கத்தை நாம் பின்பற்றவில்லை என்பது தான் உண்மை.

மேலை நாட்டு மோகம், தர்மம் இல்லாத ஊடகம், டிஜிட்டல் வளர்ச்சி, எதையும் சுலபமாக அணுக முடிகின்ற தன்மை, பாலியல் ரீதியான தெளிவின்மை என்று நீண்ட பெரும் காரணங்கள் நம் கலாச்சார அழிவிற்கான வழியை வகுத்திருக்கிறது.

எதற்காக இத்தணை பெரிய விளக்கம் என்றால் , என் சமூகத்தில் நடக்கிற விஷயங்கள் என்னை பேச வைக்கிறது.

அயனாவரம் சிறுமி பாலியல் வன்புணர்வு சம்பவம் தான் இதனை பேச வைக்கிறது. எத்தனை காழ்ப்புணர்ச்சி ,  எத்தனை குரூரம் அந்த குற்றவாளிகளின் மனதிற்குள்  இருந்திருக்கும்.

அவர்களை  குற்றவாளிகள் என்கிற வட்டத்திற்குள் வைத்துவிட மனம் விரும்பவில்லை, இந்த உலகத்தில் எந்த தண்டனை மிக கொடுமையானதாக இருக்குமோ அதை அவர்களுக்கு பரிசளிக்க விரும்புகிறேன்.

காது கேளாத ஒரு சிறுமி, மனநலம் சற்று குறைந்த சிறுமி  அவளை கற்பழிக்க எப்படி மனம் வந்தது. அவளின் மன நிலை என்னவாக இருந்திருக்கும்?.

ஆயிரம் கேள்விகள் மனதை துளைக்கின்றன,  தூக்கம் தொலைகின்றன.  அரசாங்கம் என்ன தான் செய்து கொண்டிருக்கிறது?  நம்மில் அனைவருக்குள்ளும் எரிகின்ற தீ அரசாங்கத்திற்கு மட்டும்  சுடாமல் போனது எப்படி?.

ஆண் என்பவன் பலமாக இருப்பதற்கான காரணம், அவன் தன் உடன் இருக்கும் பெண்ணை பத்திரமாக பார்த்து கொள்ளவேண்டும் என்பதற்காக தானே ஒழிய, அவளை பலவந்த படுத்த அல்ல.  அந்த கற்பழிப்பில் ஈடுபட்ட அனைவருமே வயதில் மூத்தவர்கள். இளைஞர்களை குறை கூறி கொண்டிருக்கும் அதே மூத்தவர்கள் தான் இதற்க்கெல்லாம் காரணம். அந்த குடியிருப்பில் பணிபுரிகின்ற அனைவருமே இச்சை பசியில் இருந்தது வெட்கம் அடைய வேண்டிய விஷயம்.

எங்கே இது போன்ற சம்பவங்கள் காதில் விழுந்தாலும் ஒன்று அனுதாபப்படுகிறோம் அல்லது கடந்து சென்று விடுகிறோம். பேசு பொருளாகி போன அந்த பெண்ணின் வாழ்வை குறித்து யாரும் சிந்திப்பதில்லை அல்லது அதற்கான நேரம் நம்மிடத்தில் இல்லை. “எப்படி இருக்காங்க பாரேன்” என்று நண்பர்களுடன் அலாவிவிட்டு வீட்டுக்குள் அடைந்து விடுகிறோம்.

என் குழந்தை பக்கத்து வீட்டு மாமா கூட விளையாடுவதையே சந்தேகமாக பார்க்கக் வேண்டி இருக்கிறது. இங்கே எந்த ஆண்மகனையும் நம்புவதற்கு மனம் மறுக்கிறது.  சொந்த பந்தங்களை கூட நம்ப முடியாமல் தான் வாழ வேண்டும் எனில் என்ன சுதந்திரம் தான் இருக்கிறது இந்த நாட்டில்?.

பெண் பிள்ளையை பெற்றால் பாவம் என்பது போல சமுதாயம் பார்க்கப்படும் எனில், நிச்சயம் நாம் வளர்ச்சியை நோக்கி பயணிக்கவில்லை , மாறாக அகல பாதாளத்திற்கு செல்கிறோம்.

எங்களை வாழ விடுங்கள் என்று கதறும் பெண்களின் ஓசை ஆண்களின் காதுகளில் கேட்கவில்லை போலும்.  அம்மா, அக்காள், தங்கை என்ற அழகிய கட்டமைப்புக்குள் இருக்கும் நாம் தான் இத்தனை பிழைக்கும் காரணம் எனில் வெட்கி தலை குனிந்து நாம் வீழ்வது உறுதி.

நாளை இந்த பாலியல் வழக்கில் நியாயம் கிடைக்குமா என்பது தெரியவில்லை, சட்டம் தன் கடமையை செய்யும் என்று காத்திருக்கிற பல கோடி பாமரனுக்கும்  சீக்கிரம் பதில் கிடைக்கும்.

இங்கு மிக கடுமையான சட்டம் பாலியல் வன்புணர்வுக்கு எதிராக இயற்ற படவில்லை எனில் இந்த குற்றங்கள் கலையப்படுவது சந்தேகம் தான்.

அந்த பிள்ளைக்கு நடந்தது நாளைக்கு நம் பிள்ளைகளுக்கும் நடக்கலாம். ஆண் குழந்தைகளை வளர்க்கும் அப்பாக்களின் கையில் தான் உள்ளது பெண்களின் எதிர்காலம்,  பெண்களை எப்படி பார்க்க வேண்டும் என்று ஆண் குழந்தைகளுக்கு கற்பிப்பது மிக முக்கியமான ஒன்று, பாலியல் ரீதியான புரிதலை தாய் தந்தை இருவரும் குழந்தைகளுக்கு கற்று தருவது நல்லது.

பாலியல் கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும்

இனி இது நடக்காமல் இருக்க வேண்டுவோம்.

“இனி இது நடக்காமல் இருக்க வேண்டுவோம்” என்று எழுதி முடிப்பதற்குள் திருவண்ணாமலையில் ரஷ்ய பெண்கள் பாலியல் வண்பூணர்வுக்கு ஆளாக்கப்பட்ட செய்தி காதில் விழுகிறது.

“மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம்”

ராஜேஷ் ஜெகதீசன்

http://www.facebook.com/rajeshjagadeesan99

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s